பா.அரியநேத்திரன்
எம் பி வீதி -“இரதாலயம்”
அம்பிளாந்துறை
கொக்கட்டிச்சோலை
08/08/2025.

மதிப்பார்ந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்
அவர்கள்.

தாங்களால் கடந்த 5,ம் திகதி பொறுப்பு கூறல், சர்வதேச பொறுப்புக்கூறல் குற்றங்கள் தொடர்பாகவும் ஐநாவில் உள்ள பணிப்பாணை தொடர்பான குறை நெறிகள் தொடர்பாகவும் சம்மந்தமாக விடயங்களை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதத்திற்கு நன்றியறிதலை தெரிவிக்கின்றேன்.

தாயகத்தில் உள்ள அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள், வடகிழக்கில் உள்ள தரப்புகள் மனித உரிமை விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில் வழங்கியமைக்கு நன்றி.

உங்களுடைய பதில்கள் இலங்கையில் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமை தரப்பை சரியாக சுயாதீனமாக, ஆக்கபூர்வமானதாக, நியாயமானதாக முறையில் கையாளவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அதுமட்டுமன்றி செம்மணி மனித புதைக்குழிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளீர்கள் அதற்கும் நான் நன்றி தெரிக்கிறேன்.

செம்மணி புதைகுழிகள் தவிர்ந்த வேறு இடங்களான திருக்கேதீஷ்வரம் மன்னார், கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவு,சம்பூர் திருகோணமலை,வீரமுனை, அம்பாறை.கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு இப்படி பல படுகொலை புதைகுழிகள் இன்னும்பல இடங்களில் வடகிழக்கில் உள்ளன இவைகள் அனைத்தும் இவைகள் அனைத்தும் இன அழிப்பு நோக்கத்துக்காக இலங்கை அரசினால் செய்யப்பட்ட இனப்படுகொலைகள் இவற்றைப்பற்றி பல 2002 ம் ஆண்டு யூலைமாதம் முதலாம் திகதி றோம் ICC குற்றவியல் நீதிமன்றம் நடைமுறைக்கு வருவதறக்கு முன்னம் நடந்த படுகொலைகள்.

தொடர்ந்தும் நீங்கள் இலங்கை தொடர்பாக ஐநாவில் கவனத்தில் வைத்திருக்கவேண்டும் என்பதை நாங்கள் அதை அங்கீகாரத்துடன் பார்கிறோம் அதேவேளை மிகவும் ஆபத்தான ஒரு கேள்வியில் கவலையடைந்துள்ளோம் அதாவது உங்களுடைய பார்வையில் நீங்கள் மேலதிகமான சில விடயங்களை செய்யப்போவதாகவும். அதேவேளை இலங்கைதான் முழுமையான விடயத்தை செய்யவேண்டும் எனவும் உங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் இதனால் கவலையடைகின்றோம்.
குறிப்பாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பிழைகள் விட்டு வருகிறது எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை இதனால் ஐநா மனித உரிமைப பேரவையிலும் இழுபட்டு காலம் தாமதித்து செல்கின்றபடியால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பகத்தனை குறைவடைந்து செல்கிறது.

சிவில் அமைப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தரப்புகளுக்கு உங்களுடைய கடித்த்தில் உள்ள பதில் உண்மையான விடயங்களுக்கு கொண்டு சேரவில்லை.
மிகவும் பாரதூரமான விடயங்களை கையாளப்பட்டதாக இல்லை கடிதம் எழுதப்பட்டது சரியாக வெளிப்படுத்தவில்லை அதனால் என்னுடைய இக்கடிதம் தெளிவற்றதாக இல்லாமல் மிகத்தெளிவாக உங்களுடைய பதிலை ஆய்ந்து ஆழமாக வெளிக்கொணருமாறு பின்வருமல விடயங்களுக்கு பதிலை எதிர்பார்கிறேன்.

இன அழிப்புக்கான பொறுப்புக்கூறல் அரசதரப்பு பொறுக்கூறலும் கையாளப்படவேண்டும்,தனியார் பொறுப்புக்கூறலும் கையாளப்படவேண்டும்.ஐநா அலுவலகத்தினுடைய அணுகுமுறையை மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில் குற்றத்தின் உடைய கனதி என்பது அதனைடைய சாத்தியக்கூறு இங்கு நடத்திருப்பது என்பது கடுமையான குற்றம் மனித உரிமைக்கான குற்றம், போர்க்குற்றம் என்பதை நீங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளீர்கள்.அது அடுத்தகட்டமாக சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு போகவேண்டும் என்பதையும் அங்கிகரித்துள்ளீர்கள். ஆனால் இனவழிப்பு என்ற குற்றத்தை மீளாய்வு செய்ய தவறிவிட்டீர்கள் ஆகவே சில தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்த ஐநா சபையும இந்த ஐநா மனித உரிமை ஆணையகம் செயல்பாடற்ற வினைத்திறன் அற்றதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். கடந்த 16, வருடங்களாக எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்களை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த இடத்தில் நான் சற்று மாறுபடுகின்றேன்.ஏனென்றால் மியான்மார்க் விடயத்தில் 2019, ல் நியமித்த உண்மைகளை கண்டறியும் ஆணையம் ஒரு இன அழிப்புக்கான நோக்கத்தோடு செய்ததாக அறிக்கைகளை செய்திருந்தது அதற்கான தேவையும் இருந்தது.

பெரும்பாலான படுகொலைகள் 2002 ஜூலை 1ற்கு முன்பு நடந்ததால் ரோம் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வர முடியவில்லை
இந்த நிலையில்,எனது கடிதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நான்கு முக்கிய கேள்விகளை முன்வைக்கிறேன் .

  • இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட நபர்களும் சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கு உட்பட முடியுமா?
  • புதிய தீர்மானம் இல்லாமல், இந்த விவகாரம் ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் போன்ற உயர்மட்ட அமைப்புகளுக்கு கொண்டு செல்ல முடியுமா?
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா? முடியாவிட்டால் மாற்று வழிகள் என்ன?
  • இலங்கை தொடர்பான தற்போதைய அமைப்பின் (OSLAP) அதிகாரத்தை, சிரியாவுக்கான IIIM போன்று சுயாதீன சர்வதேச விசாரணை அமைப்பாக விரிவாக்க முடியுமா?
    தன்னை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த வாக்குகள், இந்த கோரிக்கைகளை வைக்கும் நெறிமுறை மற்றும் ஜனநாயக உரிமையை அளிக்கின்றன என்றும், தமிழர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஐ.நா சபை உரிய முக்கியத்துவம் தரும் எனவும் நான் நம்பிக்கை தெரிவிக்கிறேன்.

இங்ஙனம்
பா.அரியநேத்திரன்