தாந்தாமலையில் வைத்து மடத்தடி மீனாட்சியின் ஆலய வீதி சீரமைப்புக்கு உறுதியளித்த சொர்ணம் தொழிலதிபர்
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை தரிசித்த சொர்ணம் தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் அங்கு அவர் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
கூடவே சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறிலின் அன்னதானத்திலும் கலந்து சிறப்பித்து அங்கு தானதர்மங்களைச் செய்த அவர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பிரதான பாதை சீரமைப்பிற்கும் உதவுவதாகவும் கூறினார்.



