கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி

“சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, பிரதேச மக்களின் சார்பாக இளம் சட்டத்தரணி நிதான்சன் அவர்களின் தலைமையில், சமூக ஆர்வலர்கள், முன்னைநாள் மாநகரசை உறுப்பினர்கள், முன்னைநாள் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சமூகப்பற்றாளர்கள், மனித நேய செயற்பாட்டாளர்கள் என பலரும் இன்று (04.08.2023) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


வைத்தியசாலையின் இன்றைய நிலை பற்றி எடுத்துரைத்த போது மக்கள் நலன் சார்ந்த பல கருத்துக்களை சமூக ரீதியாக சமூக ஆர்வலர் திரு சந்திரசேகரம் ராஜன் முன்னைநாள் மாநகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்களுக்கு பதிலை மிக தெளிவாக பணிப்பாளர் வழங்கியதுடன் நோயாளிகளுக்கான தரம்மிக்க பாதுகாப்பான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன்
சில மனிதவளம், உபகரணங்கள், கட்டுமானம் போன்ற குறைபாடுகளை உடனடியாக திருத்த முடியாத நிலையையும், சில உத்தியோகத்தர்களின் பழக்க வழக்கங்களை குறித்த காலப் பகுதியில் திருத்துவது கடினமானக இருப்பினும் சிறந்த கருந்தாடலுக்கான பயிற்சிகள், மனித நேயத்தை சேவையாளர்களின் மனங்களில் பதிக்கும் செயலமர்வுகள், என்பனவற்றுடன், மருந்துகள் வைத்தியம் என்பதை மீறிய அன்பான வார்த்தைகள், பிறரையும் தன்னைப்போல் மதிக்கும் குணாம்சங்கள் இவ்வாறான மனித நேய பண்புகளை சேவையாளர்களிடம் இருந்து மேம்படுத்த ஒரு காலப்பகுதி தேவையாகவுள்ளது என்று பதில் கூறினார். அதனை படிப்படியாக செய்து வருவதாகவும் இவ்வாறான குறைபாடுகள் சமூக மட்டத்தில் இருந்து உங்களைப்போல பொதுநோக்கம் கொண்டவர்களினால் வைத்தியசாலை நிருவாகத்திற்கு நேரடியாக கொண்டுசேர்க்க வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் . அதை ஒரு சமூகூடகங்கள் மூலமின்றி நேரடி அணுகுமுறை மூலமே திருத்த முடியும். அதற்காக உங்கள் ஆதரவும் தேவை எனவும் கூறினார்.


மேலும் மனிதநேய செயற்பாட்டாளர் தா.பிரதீபன், முன்னைநாள் மாநகர சபை உறுப்பினர் சிவலிங்கம் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் தங்கவேல் ஆசிரியர், கதிரமலை, கல்முனை இளைஞர்சேனை அமைப்பின் தலைவர் டிலாஞ்சன் (டிலு)    போன்ற பலரின் கருத்துக்கள் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் நிர்வாகக் குழுவினர் இதற்கான பதிலையும் வழங்கியிருந்தனர்.


மேலும் வைத்தியசாலையில் முன்னைநாள் குழு உறுப்பினர் பொன் செல்வநாயகம் அவர்கள் கூறுகையில்,
புதிய பணிப்பாளரான குணசிங்கம் சுகுணன் அவர்களை கல்முனை சமூகம் சார்பாக வரவேற்பதுடன், அவரின் வைத்தியசாலை சார்ந்த  எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள்,  நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட கால திட்டங்கள், என்பவற்றின் வெற்றிக்கு தாங்கள் தோளோடு தோள் நின்று பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும்,
எமது பங்களிப்பை சகல வழிகளிலும் மக்கள் சார்பாக வழங்குவதற்கு முன்வருவோம் என்ற உறுதி மொழியை கூறினார்.


அத்துடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கான வினைத்திறன் நிறைந்த சேவைகளை வழங்கும் பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தார். வைத்தியசாலை எதிர்கொள்ளும் குறைபாடுகளை சீர் செய்யவும், நோயாளர்களின் நலன்களை மதித்து திட்டமிட்டு செயல்படும் ஒரு துடிப்பான இளைஞர் என வைத்தியசாலை பணிப்பாளரை பாராட்டியதுடன், இவ்வாறான ஒருவர் இவ் வைத்தியசாலைக்கு கிடைத்தது கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிடைத்த சொத்து  எனவும் கூறினார் பணிப்பாளருடன்  பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சா.இராஜேந்திரன் அவர்களும் கணக்காளர் கேந்திர மூர்த்தி தாதிய பரிபாலகர் சசிகரன் மற்றும் நிர்வாகம் சார்ந்த உத்தியோகத்தர்கள் தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டு பொதுமக்கள் சார்ந்த கருத்துக்களை கேட்டறிந்தனர்.


அத்துடன் இளம் சட்டத்தரணி நிதான்சன் அவர்களின் தலைமையிலான குழு தேவை ஏற்படின் திங்கள் கிழமைகளில் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் குழுவினரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார் . குழு சார்பாகவும்  வைத்தியசாலை நிர்வாக குழுவிற்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.