கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC) எப்போது?
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எப்போது நடைபெறும் என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த கால அரசாங்கத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் இனவாத நோக்கத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடாத்தாமல் இருந்தார் எனும் குற்ச்சாட்டும் அதிருப்தியும் காணப்பட்டது. தற்போது இனவாதம் இல்லாத அரச சேவைகள் மக்களை சீராக சென்றடைய வேண்டும் எனும் கருத்துடன் பயணிக்கும் இந்த அரசாங்கத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ச நியமிக்ப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் இதுவரை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் நடத்தப்படாது தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஆட்சேபிக்கும் பொதுமக்கள் தாமதிக்காமல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்குவதற்கு காலாகாலமாக சில இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்து வரும் நிலையில் இப் பிரதேச செயலகத்திற்குரிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் நியமனத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த கால ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.