அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

( வி.ரி. சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரமவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் நெறிப்படுத்தலில் இன்று (31) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி  தலைமையில் இன்று (31.07.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் ஹமீது வாசித், கவி.கோடிஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பெருந்தோட்டக் கம்பனி – ஹிகுரான சீனி கல்லோய தொழிற்சாலை மற்றும் கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.