திருக்கோவிலில் காணிக்கச்சேரி
(வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பாலக்கரச்சி,சாகாமம் ,பழவர்க்கம் ,சேனைக்காடு ,தாண்டியடி,
கஞ்சிகுடியாறு,சாகாமம்,காஞ்சிரங்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான காணி கச்சேரி அங்கு நடைபெற்றது.
சேவை நாடிகள் வந்து தங்கள் விளக்கத்தை அளித்தனர்.



