ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு
(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து நேற்று (29) செவ்வாய்க்கிழமை அறுபதாவது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி பரவலாக சேவை நலன் பாராட்டு விழா இடம் பெற்றுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முதல் பல அமைச்சுகளும் திணைக்களங்களும் சேவை நலன் பாராட்டு நிகழ்வுகளை கடந்த இரு தினங்களாக திருகோணமலையில் நடாத்தினார்.
அதன் போது செயலாளர் கோபாலரெத்தினத்தின் சேவையை பலரும் பாராட்டிப்பேசினர்.
பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










