அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.07.2025 நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.


மட். குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இவ் அமைப்பால் நடாத்தப்படும் விபுலாநந்த முதியோர் பராமரிப்பு நிலைய மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு அமைப்பின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி (தலைவர் ADVRO -UK) அவர்களின் தலைமையில் நடைபெறும்.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் ,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் ஆகியோரும் ,ஏனைய அதிதிகளாக டாக்டர் திருமதி பு.லோகநாதன் ,டாக்டர் வா.ஞானரெட்ணம் ,டாக்டர் வீ.அற்புதன்) , சா.அருள்மொழி ( மா.ச.சே உத்தியோகத்தர்) , எந்திரி த.முயூரதன் எந்திரி தே.சர்வானந்தன்க, அழகரெட்ணம் ( போதனாசிரியர் உ.தா.உத்தியோகத்தர்) உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.