இன்றைய சூழ்நிலையில் மக்களின் ஒழுங்கு படுத்தப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களினால் தொற்று நோய்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும் என்பது அவசியமாகிறது .


அதனடிப்படையில் எமது தவறான உணவு பழக்கவழக்கங்களினாலும், முறையான உடற்பயிற்சி இன்மையாலும் , தொற்றா நோய்களின் பாதிப்பு இளவயதினரிடையே கூட வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதற்காக உலக சுகாதார நிறுவனத்தினால் தொற்றாநோய் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றது.

இந்த ஒழுங்கமைப்பில் இன்று (24) கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் இவ்வைத்தியசாலையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் விழிப்புணர்வு சைக்கிள் சவாரி நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று மீண்டும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு திரும்பும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.

மிக இக்கட்டான நிலையில் இவ்வைத்தியசாலையை  பொறுப்பேற்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய அம்பாரை வைத்தியசாலையின் முன்னைநாள் பணிப்பாளரும், கல்முனை ஆதார வைத்தியசாலையின் இடைக்கால பணிப்பாளருமாக கடமையாற்றி அமரத்துவமடைந்த  வைத்திய கலாநிதி B.K.C.L. ஜயசிங்க
அவர்கள் இந் நிகழ்வை 2012/2013 காலப் பகுதியில் முதல் தடவையாக ஆரம்பித்து வைத்தார் என்பது மறக்க முடியாத விடயமும், நினைவூட்ட வேண்டிய விடயமுமாகும்.

அதே வேளையில் தற்போதைய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் இடைவிடாத சுகாதார அமைச்சின் நிகழ்ச்சி நிரல் திட்டங்களுடனும், இவ்வாறான நிகழ்வுகளை கைவிடாது மேலும் சிறப்பாக வடிவமைத்து தானும் துடிப்புடனும், சகல உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களுடனும் இணைந்து பங்குபற்றுவதும் சிறப்பான அணுகுமுறையாகும். 

இத்தோடு சவாரியில் பக்கு பற்றும் அனைவருக்கும் பணிப்பாளர் நிகழ்வின் ஆரம்பத்தில் தனது கட்டளைகளை மிக நேர்த்தியாக அறிவுறுத்தினார்.
இதில் பாதசாரதிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
வழியில் காண்பவர்களுக்கு மகிழ்வுடன் கைகளை அசைத்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் முடிந்தால் தொற்றா நோய்பற்றிய சிறிய அறிவுரைகளை வழங்குங்கள் எம்மால் எவருக்கும் இடையூறுகள் வராதபடி சவாரி அமைய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலதிக புகைப்படங்களும் சில மணி நேரத்தில் இணைக்கப்படும்