மேலும் தீவிரப்படுத்தப்பட்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரண விசாரணை
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 வது மாடியில் இருந்து குதித்து
உயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி மரணம் தொடர்பில்
ஆராய 10 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் கடந்த 29 ஆம் திகதி 16 வயதான
மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டில் பாரிய அதிர்
வலையை ஏற்படுத்தியது.
உயிரை மாய்த்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றில்
கல்வி கற்று வந்த காலப் பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால்
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது
என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்