அருகம்பை கடற்கரை பகுதியை  அழகுபடுத்திய  இராணுவம்

(பாறுக் ஷிஹான்)


ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில்   அமைந்துள்ளது நீர் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டிற்கு  நல்ல சூழல் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்   அறுகம்பை  விரிகுடா சுற்றுலாப் பகுதியை விரும்புகிறார்கள்.

அடுத்த வாரத்திற்குள் அருகபை  விரிகுடா சுற்றுலா மண்டலம் திறக்கப்படவுள்ள நிலையில்  அருகம்பை  விரிகுடாவில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.இலங்கை இராணுவத்தின் 24வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த கலப்பத்தியின் வழிநடத்தில்  இராணுவ வீரர்கள்  அருகபை  விரிகுடாவில் ஒரு நாள் கடல் சுவரை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர்.

இதற்காக சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.அதே நேரத்தில் அறுகம்பை  சுற்றுலா காவல்துறை  பொது சுகாதார பரிசொதகர்கள்  மற்றும் பொத்துவில் பிரதேச  சபை அதிகாரிகளும் இச்சுத்தம் செய்யும் செயற்பாட்டில் இணைந்திருந்தனர்.இது தவிர தற்போது இங்கு வருகை தரும்   பல சுற்றுலாப் பயணிகளும் இந்த நிகழ்வில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

24 வது படைப்பிரிவின் துணைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக  242 வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே  14 வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24 வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்நிகழ்வில்  பங்கேற்றிருந்தனர்.