யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் –

உலகெங்கும் சைவத்தை கொண்டுசென்ற இலங்கை யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் .இந்து குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி

யாழ்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரையாதீனம் 291ஆவது மகாசந்நிதானம் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்று தம்முடைய கதாகலேஷத்தால் சமயத்தை புராணத்தை மாதகணக்கில் சொற்பொழிவாற்றிய சாமிநாத சுவாமிகளுக்குபின் 2ஆம்பட்டமாக தருமையாதீனத்தில் முறையாக காஷாயம் தீட்சைகள் பெற்று ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பலமாநாடு நிகழ்வுகளில் பங்கேற்று சமயம் பரப்பியவர். நாம் மாவிட்டபுரம் கும்பாபிஷேகம் தரிசிக்க சென்றபோதுகூட சித்தாந்த மாநாட்டிற்கு அழைப்பு விட்டோம் அதுபோது இங்கே தங்கி மருத்துவம் பார்க்கலாம் என்றோம் வாரேன் என்று கூறிமகிழ்ந்தவர் மாநாடு தொடக்கத்தில் முதல்நாள் பரிபூர்ணம் எய்தியது தாங்முடியாதுயறுருகின்றோம் சைவம்காக்கும் தூண்சரிந்தது தக்கவர்கள் அம்மடத்தின்னின்று சமயத்தை காக்க செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம்.

இந்தியாஇ தர்மபுரம்இ தருமை ஆதீன 27 வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறை பிரார்த்தனை செய்தி.