பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
“நான் பொறுப்புடன் இதைச் சொல்கிறேன். சூத்திரதாரி யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை ஊடகங்களுக்கு வெளியிட மாட்டேன். ஜனாதிபதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கும் நான் அறிவிப்பேன்” என்றும் அவர் கூறினார்.