பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் ”கால் கோள்” விழா கடந்த முப்பதாம் திகதி பாடசாலை அதிபர் சி.கோகுலராஜ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணையும் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். இந் நிகழ்வுக்கு ஆன்மீக அதிதிகளாக சிவ ஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் ,அருட் திரு எஸ் A. ரூபன் ஆகியோரும், பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் கா.சாந்தகுமார் மற்றும் அதிதிகளாக ஓய்வு பெற்ற கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து மற்றும் நிரஞ்சனா தயாபரன் (பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் ) ,செல்வராசா மதன் (NLB விநியோகஸ்த்தர்) செல்வசுந்தரம் டினேஸ் ( ஆலோசகர் பெடோ ) ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியம்(பெடோ) அமைப்பினர் வழங்கியிருந்தனர்.





