சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாடுகளின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் மக்கள் விரும்பத்தகாத சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதனால், சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து சாதகமான முடிவுகளையும் நிலையான பொருளாதாரத்தை விரைவில் அடைய முடியும் என்றும் அதற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.