.

(செல்வி வினாயகமூர்த்தி)

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ அருணோதயா வித்தியாலயத்தில்
சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் சிறுவர் கண்காட்சி நேற்று (18) செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கலைகள் அம்மன், அருணோதயா மற்றும் வாணி முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களின் ஆக்கத்திறன், கற்பனைத்திறன் மற்றும் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைப்படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், திருக்கோவில் கல்வி வலய பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். விவேகானந்தராஜா, திருக்கோவில் வலயத்திற்கான முன்பள்ளிக் கல்விப் பணியக இணைப்பாளர் பி. மோகனதாஸ், திருமதி ஜெயமல்ராஜ், தம்பிராசா றீகன் உள்ளிட்ட பலரும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சி, சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது.