(அஸ்லம்)

நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்த துரவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர சபையினால் புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீண்ட காலமாக இருளில் மூழ்கி, கவனிப்பாரற்று காணப்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசமான துரவந்தியமேடு கிராமத்தின் பிரதான வீதி உட்பட உள்வீதிகளும்
மின்னொளியால் பிரகாசிக்கின்றன.

இதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களுக்கும் குறித்த வேலைத் திட்டப் பணிகளை மிகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வதற்காக பங்காற்றிய அப்பகுதிக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் தெரு விளக்கு பாரமரிப்பு ஊழியர்களுக்கும் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளன.