கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, மூன்றாம் இடத்தை (2nd Runner-up) பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம், கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர்கள், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.