கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம்’ திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை 19 ஜூன் 2026 மாலை 4:30 மணிக்கு பெரியநீலாவணை, மத்திய வீதியில் அமைந்துள்ள குறித்த மையத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார் அவர்கள் தலைமைதாங்கவுள்ள இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர அவர்களும் ,கௌரவ விருந்தினராக அபுபக்கர் ஆதம்பாவா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. ரி. ஜே. அதிசயராஜ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.