கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை!

பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் தேசிய கல்லூரியில் தரம் 6 மற்றும் 7இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ‘aTd’ (Adult Tetanus and Diphtheria) தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்  புதன்கிழமை (05) இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார செவிலியர், பொதுச் சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை வழங்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்குப் பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

 எதிர்கால சந்ததியினரைக் கொடிய தொற்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் தேசிய ரீதியில் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் பாடசாலைகள் தோறும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தாடைப் பூட்டு (Tetanus) நோயிலிருந்து பாதுகாப்பு: காயங்கள், துருப்பிடித்த இரும்பு உலோகம் மற்றும் அழுக்குகள் மூலம் பரவி, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் “Lock Jaw” எனப்படும் ஆபத்தான டெட்டனஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.தொண்டி அடைப்பான் (Diphtheria) நோய் தடுப்பு: தொண்டை மற்றும் சுவாசப் பாதையைக் கடுமையாகப் பாதிக்கும் பாக்டீரியா தொற்றைத் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு: பாடசாலைப் பருவக் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, சமூக அளவில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் இத்தடுப்பூசி பெரிதும் உதவுகின்றது.