ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தீ விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அங்கு தங்கியிருந்த 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் தீயணைப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.