புத்த சாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம், மற்றும் கல்முனை சாஹரம் இசைக்குழு இணைந்து நடத்திய அம்பாறை மாவட்ட “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வானது. நேற்றைய தினம்(30) நட்பிட்டி முனை பொது மைதானத்தில். கோலாகலமாக இடம் பெற்றது. 15 வயதுக்குட்பட்ட 13 இளம் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தார்கள்

முற்று முழுதாக சிறுவர்களை உள்ளடக்கிய. “இளம் சிட்டுகளின் ராகம் எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில்

முதலாவது இடத்தினை கல்முனையை சேர்ந்த எஸ். சாயித்திரி பெற்றுக்கொண்டதோடு அவருக்கான முதல் பரிசாக ரூபாய் 25000/- பெறுமதியான காசோலையும், சான்றிதழும் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தினை காரைதீவை சேர்ந்த எஸ். ஜஸ்மிதன் 15,000 ரூபாய். காசோலையும் மற்றும் சான்றிதழும். நினைவு சின்னமும் வழங்கப்பட்டது. மூன்றாவதாக பாண்டிருப்பு என். திஷாலிகா 10000/- ரூபாய் பெறுமதியான காசோலையுடன் சான்றிதழும் மற்றும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும். புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சினால் சான்றிதழ்களும் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதன.


பிரதான அனுசரணை IOM நிறுவனம்
. அதன் பணிப்பாளர் சோ. வினோஜ்குமார். இணை அனுசரணையாளர்களாக நண்பர்கள் ஒன்றியம் புதிய வளத்தாப்பிட்டி., துளிர் அமைப்பு , ஏற்பாட்டு ஒத்துழைப்பு சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் நற்பிட்டிமுனை, விவேகானந்தா விளையாட்டு கழகம் நற்பிட்டிமுனை. ஊடக அனுசரணையாளர்கள். KFM ஸ்டுடியோ கல்முனை., கல்முனை நெற் ஊடக வலையமைப்பு.

நிகழ்ச்சித் தொகுப்பு கிலசன் மற்றும் ரிஷி.