இன்று (30.05.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டு 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 285 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த புதிய விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் நிலைமை காரணமாக உலகலாவிய ரீதியில் எரி பொருள் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்