(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக புலனாய்வு உத்தியோகத்தர் இஸட். எம். சாஜித் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு, வியாபார நடவடிக்கைகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போது வர்த்தகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில்களை வழங்கி விளக்கமளித்தார்.

அத்துடன் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம். நிஸ்தார் உணவுப் பாதுகாப்பு தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் முஹம்மட் கபீர், சந்தை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் மனாஸிர் அஹ்சன் உள்ளிட்டோர் உரையாற்றியதுடன் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.