பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு!
zee தமிழ் சரகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது திறமையாலும் ,குரல்வளத்தாலும் உலகத்தமிழர்களின் அபிமானத்தைப்பெற்ற அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த சபேசனுக்கு ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது ஜரோப்பா அவுஸ்திரேலிய நாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவருகின்றார்.
அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்தவேளை கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் நிருவாகிகளால் கௌரவிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோதும் கௌரவிக்கப்பட்டிருந்தார்..
புலம் பெயர்ந்து எங்கு சென்றாலும் சபேசன் அவர்களை கல்முனை பிராந்திய மக்கள் தேடிச் சென்று கெளரவித்து அவரை ஊக்குவிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் சுவிஷ்நாட்டில் வசிக்கும் சமூகசேவகர் விஜியகுமாரன் இவற்றை ஒருங்கிணைப்பு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.







