செல்லையா பேரின்பராசா 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் மே 17 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சங்கத் தலைவரும் , யாழ் பல்கலைக் கழக உபவேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் கந்தர்மடம் வேதாந்த மடத்திற்கு அருகில் உள்ள அறிவாலயம் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது சங்கத்திற்கான அடுத்த ஈராண்டுகளுக்கான ஆட்சிக்குழு தெரிவுசெய்யப்படுமென இச் சங்கச் செயலாளரும் , கோப்பாய் அலசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முதல்வருமான செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன்.லலீசன் அறிவித்துள்ளார்.