அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்களுக்கு பல நிவாரண உதவி திட்டங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததுள்ளார்.

இது தொடர்பான விசேட உரையினை பாராளுமன்றத்தில ஆற்றி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இது தொடர்பாக தெரிவித்தார்.


அதன் பிரகாரம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அஸ்வெசும பயனாளிகள்
ஆகியோருக்கு; கிடைக்கவுள்ளதுடன் பல நிவாரணங்கள்
எரிபொருள் தொடர்பாகவும் அரசாங்க திறைசேரியினால் மானியம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அஸ்வெசும பயனாளிகளுக்கு தற்போது 15,000/= பெறுபவர்களுக்கு 7,500ஃ/= அதிகரிக்கப்பட்டு 22 500/= வும் 10,000/=பெறுபவர்களுக்கு 5,000/= அதிகரிக்கப்பட்டு 15000/= வும் 5,000/= பெறுபவர்களுக்கு 2,500/=அதிகரிக்கப்பட்டு
7500/=உம் ஏப்பிரல் மாதத்திற்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை
எடக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் மீனவர்களுக்கான எரிபொருள் விவசாயிகளுக்கான உர மானியம் என்பன அதிகரிக்கவும் மின் கட்டண திருத்தஙகளின் போது மக்களை பாதிக்காத வகையில் நிவாரணம் வழங்கவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எரி பொருள் நிவாரணம்

மே மாதம் முதல் அமலாகும் வகையில், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் மற்றும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அரசாங்கம் 6,000 கோடி ரூபாயைச் செலவிடும்.

விவசாயிகளுக்கான உர மானியம்!

ஒரு ஹெக்டேயருக்கு 25,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 30,000/- ரூபா வரை அதிகரித்தல்.

மேலதிக பயிர்களுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 18,000/- ரூபா வரை அதிகரித்தல்.

விவசாயிகளுக்கு, விவசாய சேவை மையங்கள் ஊடாக யால பருவ செய்கைக்காக 50 கிலோகிராம் யூரியா உர மூட்டை ஒன்றினை 10,200/- ரூபா நிலையான விலையில் வழங்குதல்.

மின்சாரக் கட்டண நிவாரணம்!

வறட்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை நுகர்வோர் மீது சுமத்தாமல், 90 அலகுகளுக்கும் (Units) குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மேலதிகச் செலவை 3 மாதங்களுக்கு அரசாங்கமே ஏற்கும்.

மீனவர் மானியம்

ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு, ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம் மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 25 நாட்களுக்கு, ஒரு லீற்றர் எரிபொருளுக்காக 50 ரூபா என்ற அடிப்படையில் 3 மாத காலத்திற்கு மானியம் வழங்குதல்.

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு 150,000/- ரூபா வீதம் ஒரே தடவையில் கொடுப்பனவு வழங்குதல்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடலுக்குச் செல்லும் இந்த கடற்றொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் .