இன நல்லுறவுக்கும் நடுநிலைக்கும் முன்னுதாரணமான ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் இழப்பு இன மத வேறுபாடு கடந்து அனைவரையும் கடும் துயரத்தை தந்துள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தளது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மூத்த ஊடகவிலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம் சலீம் நேற்று இயற்கை மரணமடைந்தார் அன்னாருக்கு பல்வேறு சமூகமட்ட தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்.
ஊடகவியலாளர் சலீம் ஊடகப்பரப்பில் முக்கிய வகிபாகத்தை வகித்தவர் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தனது பேனா மூலம் பக்கபலமாக இருந்தவர் .நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பல தசாப்த காலமாக எனது நண்பருமாவார். அன்னாரின் பிரிவு மிகுந்த மன வேதனை தந்தாலும் பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமே எனும் கடவுளின் தீர்ப்புக்கமைய அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றேன். என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்
