• வி.ரி.சகாதேவராஜா

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என்பார்கள்.  போரினாலும் பல்வேறு இயற்கை , செயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு, சிரஞ்சீவியாக வந்துள்ளது  ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை .

இன்று பலராலும் பேசப்படுகின்ற இவ் வைத்தியசாலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய வளமான பிரதேசமான கிரான்குளத்தில் அதுவும் பிரதான வீதியில் அமைந்திருக்கின்றது.



 இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு லேடி றிஜ்வே  ஆஸ்பத்திரிக்கு அடுத்ததாக ,முதன் முதல் சிறுவர்களுக்கு என்று இலவசமாக சத்திரசிகிச்சை இடம்பெற்று வருகின்ற தெய்வீக இடமாக இந்த சஞ்சீவி வைத்திய சாலையை காண்கிறோம் .

இன்று 2026 மார்ச் மாதம் 26 ஆம் திகதி இம்மருத்துவமனையில் 4000 க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சை நடவடிக்கைகள் வெ ற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

 இது உண்மையில் பெருமைக்குரிய சாதனையாகும். 

இது வெறும் “4000 உயிர்கள்” அல்ல – 4000 குடும்பங்களின் சிரிப்பையும், நம்பிக்கையையும் மீட்டெடுத்த ஒரு மனிதநேயப் புரட்சி ஆகும். “சேவை என்பது கடவுள் வழிபாடு” என்ற உயரிய கொள்கையை வாழ்வாகக் கொண்டு செயல்படும் இம்மருத்துவமனை , நோயாளியின் வலியை மட்டும் அல்லாது அவர்களின் குடும்பங்களின் கவலையை யும் நீக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இம்மருத்துவமனை யின் நிறுவனர் ஸ்வாமி மதுசூதனன் சாய் அவர்களின் தன்னலமற்ற சேவை எண்ணமே இவ்வுலகில் அரிதான இந்த முயற்சிக்கு அடித்தளமாக அமை ந்துள்ளது. மேலும், தலைவர் திருமதி பென்னி ஜெயவர்தன அவர்களின் வழிநடத்தலில் பொதுமேலாளராக திரு. டி.எஸ். டேவிட் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருவதொடு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு இயக்குநர் குழுவினரும் தங்கள் அர்ப்பணிப்பான பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இம்மருத்துவமனையின் மிகச் சிறப்பான அம்சம் – முழுமையாக இலவச சேவை . இங்கு பில் கவுண்டர் என்பதே இல்லை . பொருளாதாரத் தடைகள் காரணமாக சிகிச்சை யை இழக்கும் நிலை யை முற்றிலும் நீக்கி, மனித உயிரின் மதிப்பை உயர்த்தும் அரிய முன்மாதிரியாக இது திகழ்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தே தி, இதய நோய் சிகிச்சை க்கான “காத் லே ப்” (Cath Lab) அலகு துவங்கப்பட்டது. கற்பித்தல் மருத்துவமனை இருதயவியல் பிரிவின் ஒத்துழை ப்புடன், இதயநோய் நிபுணர்கள் டாக்டர் வினோதன், டாக்டர் அருள்நிதி மற்றும் டாக்டர் பிரான்சிஸ் ரஜவீன் ஆகியோர் அயராத உழைப்பின் மூலம் எண்ணற்ற உயிர்களுக்கு புதிய நம்பிக்கை யை அளித்து வருகின்றனர்.

இம்மருத்துவமனையின் மனிதநே யப் பணிகள் உலகம் முழுவதும் உள்ள நற்பண்புடை ய நன் கொடை யாளர்களின் ஆதரவால் த ொடர்ச்சியாகக்கு  வளர்ச்சி அடை ந்து வருகின்றன. குறிப்பாக வெ ளிநாடுகளில் வாழும் தாராள உள்ளங்கள் இம்மருத்துவமனை க்கு பெ ரும்பான்மை யாக நிதி வழங்கி வருகின்றனர். மே லும், ஆர்வமுள்ள யாரும் வங்கி வழியாகவோ அல்லது நேரடியாகவோ தங்களின் சிறிய பெரிய நன்கொடைகளை வழங்கி இந்த அரிய சேவை யில் பங்கெடுக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஒரே உலகம் – ஒரே குடும்பம்” (One World, One Family) என்ற உயரிய கோட்பாட்டை தன் உயிர் நரம்பாகக் கொண்டு,கிழக்கு மாகாணம் மட்டும் இன்றி இலங்கை முழுவதும் உள்ள நோயாளர்கள் இம்மருத்துவமனை யில் பயனடைந்துள்ளார்கள்.

 இம்மருத்துவமனை எல்லை கள் கடந்த அன்பை யும் ஒற்றுமையை யும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. இன, மத, மொழி  பேதமின்றி அனை வரையும் ஒரே குடும்பமாகக் கருதி சேவை செய்வது இந்நிறுவனத்தின் தனித்துவமான அடையாளமாகும்.

“அன்பே சிவம்” என்ற தமிழின் ஆழ்ந்த தத்துவம் இங்கு நாள்தோறும் நடை முறையில் வெ ளிப்படுகிறது. மருத்துவரின் கரம் கருணையால் நிரம்பியிருக்க, நோயாளியின் கண்களில் நம்பிக்கை மலர்கிறது. மனிதனின் உயிர் உயர்ந்தது, அதை காப்பது கடவுளின் பணியே என்ற உண்மையை இம்மருத்துவமனை தினந்த தோறும் உலகிற்கு உணர்த்துகிறது.

இந்நிறுவனம் மருத்துவ சே வை யை மட்டுமல்லாது, மனித நே யம் என்னும் அரிய செ ல்வத்தை சமூகத்தில் விதை த்து வருகிறது. எதிர்காலத்தில் மே லும் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காக்கும் கருணை மை யமாக இது தொடர வேண்டும் என்பது எல்லோரின் மனமார்ந்த வாழ்த்தாகும்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு