சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தக பதற்றங்களின் காரணமாக, சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்:
புதிய எரிவாயு விலைகள் குறித்து ஏப்ரல் 01ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும்.
தற்போதைய நிலையில், மே மாதம் வரை போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் இலங்கையை வந்தடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய எரிசக்தி தேவையின் அதிகரிப்பு காரணமாக, ஏப்ரல் 01ஆம் தேதி விலை திருத்தம் தவிர்க்க முடியாததாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

