கத்தாரில் உள்ள ஈரான் தூதரகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கத்தார் வெளிவிவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இந்த அதிகாரிகள் அனைவரும் ‘பெர்சோனா நோன் கிரேட்டா’ (Persona Non Grata) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 24 மணி நேரத்திற்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கத்தாரின் தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும் பாதிக்கப்படும் வகையில் ஈரான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே இந்த முடிவிற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இச்செயல்கள் சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானங்களையும் மீறும் தன்மையுடையவை என கத்தார் வலியுறுத்தியுள்ளது.