இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு

பிரதேசசெயலக பிரிவு திருக்கோவில்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் ஒத்துளைப்புடன் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு தேவஅவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மோற்கொண்டார். எற்பாடுகளை திருக்கோவில் இந்துகலாசார உத்தியோகத்தர்களான திருமதி நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டதுடன் பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை வழிகாட்டி நூல், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, மாணவர் குறிப்பேடு, பஞ்சாங்க நாட்குறிப்பு, என்பன வழங்கி வைக்கப்பட்ட போது.