மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

இருப்பு விபரங்கள்:
நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் வழமை போன்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை நம்பித் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவினாலும், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகச் சங்கிலியை எவ்வித பாதிப்புமின்றித் தொடர்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.