Oplus_131072

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026

செல்லையா பேரின்பராசா.

வவுனியா கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ” நாடகசிரோன்மணி ” கந்தையா ஸ்ரீகந்தவேள் எழுதிய ஐந்து சமூக நாடகங்களைத் தாங்கி வரும் ” சுமைதாங்கி ” நூலின் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில்  சனிக்கிழமை 07.02.2026 காலை 09.30 மணியளவில் தமிழறிஞர்,  தமிழ்மணி அகளங்கன் ( நா.தர்மராசா)  தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ் விழாவில் படைப்பிலக்கியத் துறையில் ” கலைக்குருசில் ” விருது பெற்ற கலாபூசணம் நா.தியாகராசா,  கலாபூசணம் முனைவர் மேழிக்குமரன் மற்றும் கலாபூசணம் விருது பெற்ற கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.