கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து சிரமதானம், மர நடுகை என்பனவும் இடம் பெற்றன. இந் நிகழ்வுகளில் பிரதேச செயலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பாதுகாப்பு பிரிவினர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை திருநாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பில் இடம் பெற்றதுடன், நாட்டின் அனைத்து இடடங்களிலும் அரச திணைக்களங்களிலும் சுதந்திர தின நிகழ்வு பரவலாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.