முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல்  விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது

இதற்கு முன்னர் கடந்த 27ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தான் அன்றையதினம் முன்னிலையாக முடியாதென்றும், இரண்டு வார கால அவகாசம் கேட்டும் ஷிரந்தி ராஜபக்ச கோரிக்கை முன்வைத்திருந்தார்.