நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்தது, அதில் இதுவரை அரசாங்கம் 904 ரூபாய் பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று (20) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு, சுங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் விடுவிக்க 3% வரி சேர்க்கப்படும்,மேலும் இது 5 மாத காலத்திற்குள் சுமார் 45% ஆக அதிகரிக்கும்.

இதனால் நுகர்வோர் அந்த கூடுதல் தொகையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியிருந்தாரர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நாட்டில் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வாகன இறக்குமதியில் இறக்குமதியாளர்கள் மீது இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.