118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்
பாறுக் ஷிஹான்
வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் 5.56x 45mm பாணமை பொலிஸ் இன்று நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதோடு தனது சகோதரரிடம் குறித்த வீட்டினை பழுதுபார்க்கும் பணியை ஒப்படைத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண
பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

