(கல்முனை ஸ்ரீ)
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொது மக்கள் தமது சுற்றாடலை நுளம்பு பரவாத
வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கல்முனை வடக்கு சுகாதார சேவை வைத்திய அதிகாரி நடராஜா ரமேஷ் கோரிக்கை விடுக்கின்றார்.
கல்முனை பிரதேசத்தில் கல்முனை, பாண்டிருப்பு,,பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு , துரைவந்தியமேடு ஆகிய பிரதேசங்களில் சிக்குன்குனியா, டெங்கு, வாந்திபேதி, வைரஸ்காய்ச்சல் போன்ற நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மக்கக்கள் இந்நோய் தொடர்பாக விழிப்பாக இருத்தல் வேண்டும் , எனவும் நோய்த்தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள
சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அவர்
தெரிவித்தார்.
கடந்த 2025 ம் ஆண்டு முன்னைய ஆண்டை விட டெங்கு நோயாளர்கள் அதிகமாக காணப்படவில்லை என்றும் மிக சிறிய அளவிலான டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டதாகவும் இறப்புக்கள எதுவும் பதிவாக
வில்லையென்றும் தெரிவித்த அவர் இது தொடர்பாக சுகாதார
திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறுமம் அவர்
மேலும் தெரிவித்தார
