கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் 2026 ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு

  பாறுக் ஷிஹான்
 
மலர்ந்துள்ள 2026 ஆண்டு  புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல்  இன்று 2026.01.01. இடம்பெற்றது.

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் நாள் கடமை ஆரம்பம் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய கீதம் மற்றும் வலய கீதம் என்பன இசைக்கப்பட்டதுடன் முதல் நாள் சத்தியபிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.