இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தமது எக்ஸ் கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய கடற்படைக் கப்பல்களான INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகியவை கடந்த 28 ஆம் திகதி நிவாரணப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

அத்துடன் இந்திய மீட்பு பணியாளர்களும் இலங்கையில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி – தினகரன்