-சௌவியதாசன்-
கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது. கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி வெள்ள நீரால் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ் வீதியில். அஞ்சல் அலுவலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம். வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை போக்குவரத்து சபை சாலை. போன்ற முக்கிய. அலுவலகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை போக்குவரத்து சபை. நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக. போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் அனைத்தும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் பயணிப்போர் அவதானமாக. செல்லுமாறு. அறிவுறுத்தப்படுகின்றனர்.












