கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
-சௌவியதாசன்-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு ,துரைவந்தியமேடு போன்ற பகுதிகளின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில வீடுகளில் வெள்ள நீர் உற்புகுந்தும் காணப்படுகிறது.
பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு பின்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி. முற்றாக நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைதீவு மாவடிப்பள்ளி வீதி மற்றும் கிட்டங்கிவீதி, போன்ற வீதிகளின் ஊடாகவும் வெள்ள நீர் பாய்கிறது.
தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் அன்றாட நிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காலை கல்முனை நகரம் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. மீனவர்கள், விவசாயிகள், அன்றாட தினசரி கூலி வேலை செய்வோர் ஆகியோர் தமது ஜீவனோபாயத்துக்காக. நெருக்கடி நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே அரசாங்கமும், பொது அமைப்புகள். நலன் விரும்பிகள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
கடலும் கொந்தளப்பாக உள்ளது. எனவே மினவர்களும் பயணம் செய்யும் பொதுமக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது























