கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

பாறுக் ஷிஹான்

வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பூனை 5பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.