( பாறுக் ஷிஹான் )

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  அரச மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று  (23) மாலை  கல்முனை தலைமையக   ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை  கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில்   மேற்கொண்டிருந்தனர்.
 
 இதன் போது   சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக  மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக  நபரும்  மீட்கப்பட்ட மதுபான வகைகளும்  நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

66 வயதுடைய பெண் சந்தேக நபரை  இதன் போது  கைது செய்த பொலிஸார்  ஒரு தொகை பணம் மற்றும்  பல்வேறு  மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைககமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்   வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மதுபான விற்பனை அதிகரித்துள்ளதுடன் அவ்விடயம் தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.