(கல்முனை ஸ்ரீ)
கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்
பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேச
பாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரிய
சகோதரி நெர்யலின் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வண பிதா அன்ரன் றெரஸ் றாகல் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக முன்னாள் கல்வியற் கல்லூரி அதிபர் மொகமட் அலியார் கலீல், விஷேட அதிதியாக சம்மாந்துறை வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
அதிபர் அந்தனி சுதர்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நகழ்வில் பெருமளவிலான பெற்றோர் கலந்து கொண்டதுடன் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.