களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ரிஸ்வான் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவினர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள்.
-எம்.ஆர்.எம்.மர்ஷாத்-
கல்முனை இருந்து மட்டக்களப்பு செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மாவடிப்பள்ளியினை சேர்ந்த 2 சகோதரர்களில் ஒருவர் உயிருக்காக போராடும் சோகம்.
கல்முனை இருந்து- மட்டக்களப்பு செல்லும் பிரதான வீதி களுவாஞ்சிக்குடி இடம்பெற்ற வீதி விபத்தில் மாவடிப்பள்ளியை சேர்ந்த வட்டானையின்
மகன் ரிஸ்வான் வயது 32 மற்றும்
மாவடிப்பள்ளியை சேர்ந்த நசார் பொலிஸின் மகன் ஆக்கில் வயது 22 இருவர் சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளாக்க பட்டனர் இதில் ரிஸ்வான் எனும் சகோதரர் மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கின்றார் அவரின் உடல் நலம் பெறுவதற்கு குடும்பத்தினர், நண்பர்கள் இறைவனைப் பிராத்திக்குமாறு கேட்டு கொள்ளுகின்றனர்.
குறிப்பாக களுவாஞ்சிக்குடி பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் அவர்களின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களின் பின்னால் சென்ற வேன் சாரதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் கடந்த
புதன் கிழமை மதியம் நேரம் -3.20
(2025/11/12) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை இருந்து
மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் பின்னால் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேன் ஓட்டுனர் குடிபோதையில் பாதையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் இடித்து விட்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேனில் சாரதி கோட்டைக்கல்லாறு பிரதேசத்தை சேர்ந்தவர் அண்மையில் லண்டனில் இருந்து திரும்பி வந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வருகிறது.
தற்போது வேனின் சாரதி களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

