புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்கள்
மக்கள் விழிப்புணர்விற்காக கூறும் கருத்து

இன்றைய உலகில் வேகமாக பரவிவரும் சுவாசநோய்களில் COPD (Chronic Obstructive Pulmonary Disease) மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாகும். நுரையீரலின் காற்றுக்குழாய்கள் குறுகி, மூச்சு சுதந்திரமாக செல்ல முடியாத நிலையில், இந்த நோய் காலப்போக்கில் அதிகரித்து வாழ்க்கை தரத்தையே பாதிக்கக்கூடியது. இதனை காலதாமதமின்றி உணர்ந்து, சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதில்,

  1. Chronic Bronchitis
    காற்றுக்குழாய்களில் அழற்சி ஏற்பட்டு சளி அதிகரிப்பதால் காற்றோட்டம் குறைகிறது.
  2. Emphysema
    நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் (Alveoli) சேதமடைந்து சுவாசத்திறன் குறைகிறது.

இரண்டும் சேர்ந்து மூச்சு விடுவது சிரமமாகும் நிலையை உருவாக்குகின்றன.

அடிக்கடி மூச்சுத்திணறல், தொடர்ந்த இருமல், அதிக சளி, வீசும் சத்தம் (Wheezing), உடல் சோர்வு, நெஞ்சு இறுக்கம், அடிக்கடி சுவாசத் தொற்று, உடற்பயிற்சி/நடப்பு செய்யும் போது மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் நீண்டகாலமாக இருந்தால் அவை COPD-க்குரிய அடையாளமாக இருக்கலாம். வயதுதான் காரணமென தவறாகக் கருதி தாமதமாக சிகிச்சை பெறுவதே மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது

முக்கியமாக புகைபிடித்தல் அல்லது புகைபிடிப்பவரின் முன்னால் இருத்தல், தொழிற்சாலை புகை, தூசி, இரசாயன வாயுக்கள், டீசல் புகை, காற்று மாசுபாடு போன்றவற்றால் COPD வருகிறது

நிரந்தரமாக குணப்படுத்த முடியாவிடினும், அறிகுறிகளை கட்டுப்படுத்தி நோயின் முன்னேற்றத்தை மிதமாக்கி, வாழ்க்கை தரத்தை அதிகரிக்க முடியும்.

புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்துதல், பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உடலை வலுப்படுத்தும்

COPD என்பது “முடிந்துவிட்டது” என்று எண்ண வேண்டிய நோய் அல்ல. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சரியான மருந்துகள், உடற்பயிற்சி, மற்றும் புகைபிடிப்பை நிறுத்துதல் ஆகியவற்றின் உதவியுடன், நோயின் முன்னேற்றத்தை நிறுத்தி, நல்ல தரத்தில் வாழ முடியும்.

“மூச்சு திணறல் நீடித்தால் அதை சாதாரண இருமல் என்று எண்ணாதீர்கள். உடனே பரிசோதனை செய்யுங்கள்.”

சித்த மருத்துகள் அரச சித்த ஆயுள்வேத யுனானி வைத்தியசாலையின் மருத்துவர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்

ஆடாதோடை கஷாயம்- இவை மூச்சுக்குழாய்களில் இருக்கும் குறுக்கு நிலையைத் தளர்த்தி சளியை வெளியேற்ற உதவும்.

தாளிசபத்திரி கஷாயம்- நீண்டகால இருமல் மற்றும் சளி பெருக்கம் உள்ளவர்களுக்கு உகந்தது.

தாளிசாதி சூரணம் – இருமல், சளிக்காக

திரிகடுகாதிசூரணம்- அஜீரணத்தால் ஏற்படும் காசம் மற்றும் சளியை குறைக்கும்

அதிமதுரம் சூரணம்- மூச்சின் விடுதலைக்கு உதவும்.

கபசூர குடிநீர்- சளி, தொற்றுக்களுக்கான ஆதரவு தரும்

COPD ஒரு நீண்டகால நோய் என்பதால் சித்த மருந்துகள் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அளவு, காலம், மருந்து என்பன COPD யின் நிலை, வயது, நுரையீரலின் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.

நவீன மருத்துவ சிகிச்சையையும் கட்டாயம் தொடர வேண்டும்.

தொகுப்பு
அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்