களுவாஞ்சிகுடியில் கலைஞர்களுடனான ஒன்றுகூடல்
செல்லையா-பேரின்பராசா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு 04.11.2025 ஆந் திகதி செவ்வாய்க் கிழமை மாலை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட கிராங்களில் உள்ள கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை சபையோர் முன்னிலையில் வெளிப்படுத்தினர்.
இதற்கமைய நாட்டார் பாடல்கள் மற்றும் கிராமிய விளையாட்டுக்கள் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் நா. நாகேந்திரனும், பறை மேளக்கலை தொடர்பாக கலைஞர் கந்தன் பேரின்பநாயகமும், பரதக்கலை தொடர்பாக ஒய்வுநிலை நடன பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா தனசேகரனும்,சிறுகதை தொடர்பாக சிறுகதை எழுத்தாளர் செல்வி புஸ்பா இராசையாவும் , மிருதங்க கலை தொடர்பாக கலைஞர் த. லுதர்சனும் கருத்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், கலாசார உத்தியோகத்தர் திருமதி வ. பற்பராசா இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






