தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்தப்பட்ட 2024/2025 ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகளை பெற்று பாடசாலை சாதனை படைத்துள்ளது.

  1. விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் மாவிலையை பயன்படுத்தி வாகனப்புகையில் வெளிப்படும் நச்சு வாயுக்களின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறை எனும் தலைப்பில் அபிட்சன், போபிலாசினி, சப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் ஆய்வினை மேற்கொண்டு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
  2. இலங்கையின் சிறந்த விஞ்ஞான கழகத்திற்கான தேசிய விருது கல்லூரியின் அதிபர் திரு.M.சபேஸ்குமார் அவர்களிற்கு வழங்கப்பட்டது.
  3. விஞ்ஞான விருத்திக்கான இலங்கையின் சிறந்த ஆசிரியரிற்கான தேசிய விருது எமது பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமாரிற்கு 2வது தடவையாக வழங்கப்பட்டது.
    இவ்விருதுகளை விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் அபேசிங்க வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் தீவிருந்து இப்பாடசாலை மட்டுமே தமிழ் மொழி பாடசாலைகளில் இவ்வாறு மூன்று தேசிய விருதுகளை பெற்றிருந்தமை என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.